முக்கா, செப் 2: கம்போங் சுவா மற்றும் கம்போங் காலிட் பத்தாங் ஓயா, டாலட் இடையேயான பகுதியில் படகு ஒன்றின் மீது (மோட்டார் போட்) விரைவுப் படகு மோதியதில் முதியவர் ஒருவர் ஆற்றில் விழுந்து காணாமல் போனார்.
பாதிக்கப்பட்டவர் 80 வயதுடைய கம்போங் கிளிட்டைச் சேர்ந்த டோஸ் காதேக் என அடையாளம் காணப்பட்டதாக சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
"இந்தச் சம்பவம் வாட்டர்ஃபிரண்ட் டாலட்டிருந்து 39 கிலோமீட்டர் தொலைவில் நடந்தது. இச்சம்பவம் குறித்து காலை 9.42 மணியளவில் தீயணைப்புப் படையினருக்கு அழைப்பு வந்தது. பின் முக்கா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் (பிபிபி) குழு அவ்விடத்திற்கு விரைந்துள்ளது" என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார். .
வாட்டர்ஃபிரண்ட் டாலட்டிருந்து படகு மூலம் சம்பவம் நடந்த இடத்திற்கு காவல்துறையினர் பயணம் செய்தனர். பயண நேரம் 1 மணி 30 நிமிடங்கள் ஆகும் என்று செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இதுவரை தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
- பெர்னாமா


