புத்ராஜெயா, செப் 2- புதிய சைபர்ஜெயா 2 தொடக்கப் பள்ளியின்
கட்டுமானம் தொடங்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 2027ஆம் ஆண்டு
முழுமையாக பூர்த்தியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முப்பத்தாறு வகுப்பறைகள் மற்றும் பல்வேறு வசதிகளைக் கொண்ட
இப்பள்ளியை நிர்மாணிப்பதன் மூலம் அருலுள்ள பள்ளிகள் எதிர்நோக்கி
வரும் மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பு பிரச்சனையைத் தீர்க்க முடியும்
என்று கல்வியமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியது.
நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் நிலவி வரும் மாணவர் அதிகரிப்பு
பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு ஏதுவாக அமைச்சு பல்வேறு
நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவற்றில் கேபின் வகுப்புகள் மற்றும்
நடமாடும் வகுப்பறைகளை உருவாக்குவது மற்றும் அருகிலுள்ள
பள்ளிகளுக்கு மாணவர்களை இட மாற்றம் செய்வது ஆகியவையும்
அடங்கும் என்று அமைச்சு குறிப்பிட்டது.
இவ்வாண்டு நாடு முழுவதும் 27 புதிய பள்ளிகளை நிர்மாணிப்பதற்கு
அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் அது தெரிவித்தது.
முன்னதாக, 12 ஆயுத்த வகுப்பறைகள், சீரமைப்பு, தளவாடங்கள்,
மின்இணைப்பு மற்றும் கழிப்பறைகள் ஆகியவை சைபர் ஜெயா தேசிய
பள்ளியிடம் ஒப்படைக்கப்பட்டன.


