NATIONAL

தேச கோட்பாடுகளை கடைப்பிடிப்பது, சுதந்திரம் என்றால் எதையும் செய்யலாம் என்ற எண்ணம் வேண்டாம் -மந்திரி புசார்

31 ஆகஸ்ட் 2024, 2:51 AM

ஷா ஆலம், ஆகஸ்ட் 31: சிலாங்கூர் மக்கள் தங்கள்  சிந்தனையை தேக்க நிலையில் இருந்து விடுவித்து, நாட்டின் இறையாண்மைக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் இனங்களுக்கிடையேயான ஒற்றுமைக்கு  வலு சேர்க்க அழைக்கப் படுகிறார்கள்.

இந்த மாநிலத்தின் மற்றும்  நாட்டின் அனைத்து சாதனைகளும் சுதந்திரமான மனப்பான்மை கொண்ட மக்கள் மட்டுமல்ல, சீர்திருத்தங்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய மக்களின் உழைப்பாலும் பெறப்படுவது என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.

"மெர்டேக்கா ஆன்மாக்கள் திறந்த மனதுடன், எது தவறு, எது சரி, எது தொடலாம், எதை  தொடக்கூடாது, நமது அரசியலமைப்பு, நமது ராஜா, மலாய் மொழி தேசிய மொழி மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றைப் புரிந்து கொள்பவர்கள்.

பல இன சமூகத்தில் "சுதந்திரத்தின்   உண்மையான உணர்வுகளையும் , விதிகளையும் புரிந்து கொண்டு ஒருவருக்கொருவர் மரியாதை கொடுத்து  அமைதியை நேசிப்பதும், ஒற்றுமையைக் காப்பதுமாகும்.

“சிலாங்கூர் மக்கள் சுதந்திரமான மனப்பான்மையுடன் இருக்க வேண்டும். இந்த ஆண்டு சுதந்திரக் கொண்டாட்டத்தில் இணைந்து இந்த அம்சத்தை நாம் ஒன்றாக பாதுகாக்க வேண்டும்" என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நேற்று இரவு மாநிலத்தின் 67வது தேசிய தின விழாவில் கூறினார்.

60,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் முன்னிலையில் டத்தாரான் மெர்டேக்கா  ஷா ஆலத்தில் பேசிய அவர், நாடு சுதந்திரமாக இருந்தாலும் மக்கள் அனைவருக்கும் ஏற்புடைய சிறந்த கோட்பாடுகளை பராமரிக்க வேண்டும் என்று நினைவூட்டினார்.

"நாம் சுதந்திரமாக, வளமாக  வாழ,  என்றும்  நாட்டில் என்றும் நல்லிணக்கத்தை பேண வேண்டும். சுதந்திரமாக இருப்பது என்பது இந்த நாட்டில் அரசியலமைப்பு மற்றும் விதிகளை மதித்து நடப்பதுமாகும், எதையும் சுதந்திரமாக பேசலாம், சொல்லலாம், செய்யலாம் என்று அர்த்தமல்ல.

"இந்த ஆட்சி, அதன் ஆட்சி காலம் முழுவதும் மக்களையும், நாட்டையும் சட்டத்தையும் முழு மனதுடன் மதித்து பாதுகாக்கும், சிலாங்கூர் மற்றும் மலேசிய மக்களின்  அர்த்தமுள்ள  சுதந்திரத்தையும்,    ஆன்மாக்களையும் என்றும் பாதுகாக்கும்," என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.