ஷா ஆலம், ஆகஸ்ட் 30: இன்று காலை 5 மணியளவில் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் நிலம் உள்வாங்கிய சம்பவத்தில் காணாமல் போன பெண்ணை தேடும் மற்றும் மீட்கும் (எஸ்ஏஆர்) நடவடிக்கையை தீயணைப்புப் படை நிறுத்தியது.
இந்த நடவடிக்கை ஸ்கூபா டைவர்ஸுக்கு அதிக ஆபத்தாக இருப்பதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் ஜெனரல் டத்தோ நோர் ஹிஷாம் முகமட் கூறினார்.
"பிற தேடுதல் மற்றும் மீட்பு முறைகளைக் கண்டறிய பிரதமர் துறை அமைச்சர் (கூட்டரசு பிரதேசம்), டாக்டர் ஜலிஹா முஸ்தபா மற்றும் கோலாலம்பூர் மாநகர் மன்றம் ஆகியோருக்கு ஜேபிபிஎம் ஆலோசனை வழங்கும்.
"ஸ்கூபா டைவர்ஸுக்கு அதிக ஆபத்தை விளைவிப்பதோடு அவ்விடத்தில் டைவர்ஸ்கள் கடக்க கடினமான தடைகள் இருக்கும்," என்று அவர் கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை, மஸ்ஜித் இந்தியா பகுதியில் நிகழ்ந்த மண் உள்வாங்கிய சம்பவத்தில் இந்திய பிரஜையான விஜயலட்சுமி (48) காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.


