NATIONAL

ஷா ஆலம் புகைப்படப் போட்டி 2024யில் பங்கேற்க அழைப்பு

30 ஆகஸ்ட் 2024, 4:22 AM
ஷா ஆலம் புகைப்படப் போட்டி 2024யில் பங்கேற்க அழைப்பு

ஷா ஆலம், ஆகஸ்ட் 30: ஷா ஆலம் புகைப்படப் போட்டி 2024 மூலம் மொத்தமாக RM10,000 ரொக்கப் பரிசை ஷா ஆலம் மாநகராட்சி (எம்பிஎஸ்ஏ) வழங்குகிறது.

மார்ச் 25 தொடங்கி நாளை வரை நடைபெறும் இப்போட்டியில் பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பொது பிரிவில் வெற்றியாளருக்கு RM2,000, RM1,500 (இரண்டாம் இடம்), RM1,000 (மூன்றாம் இடம்) மற்றும் ஐந்து வெற்றியாளர்களுக்கு RM200 ஆறுதல் பரிசு வழங்கப்படும்.

மேலும், தொழில்முறை பிரிவில், வெற்றியாளர்களுக்கு RM2,000, இரண்டாம் இடத்திற்கு RM1,500 மற்றும் மூன்றாம் இடத்திற்கு RM1,000 வழங்கப்படும்.

“இப்போட்டியில் ஷா ஆலம் நகரைச் சுற்றியுள்ள கட்டிடங்கள் அல்லது அடையாளங்கள், இயற்கை, வாழ்க்கை முறை மற்றும் சுவாரஸ்யமான இரவு காட்சிகள் ஆகிய பிரிவுகள் இடம்பெற்றுள்ளன.

“ரொக்கப் பரிசுகளை வெல்ல அனைவரும் இப்போட்டியில் கலந்து கொள்ள அழைக்கப்படுகின்றனர். போட்டி படிவங்கள் மற்றும் நிபந்தனைகளை http://www.mbsa.gov.my இல் நாடலாம்,” என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

ஏதேனும் கேள்விகள் இருந்தால் கார்ப்பரேட் மற்றும் மக்கள் தொடர்புத் துறையை 03-5510 5133 நீட்டிப்பு 1430 அல்லது 1777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.