NATIONAL

மாநில நிலையிலான தேசிய தினம்- ஷா ஆலமில் மூன்று சாலைகள் இன்று மாலை 3.00 மணி முதல் மூடப்படும்

30 ஆகஸ்ட் 2024, 2:33 AM
மாநில நிலையிலான தேசிய தினம்- ஷா ஆலமில் மூன்று சாலைகள் இன்று மாலை 3.00 மணி முதல் மூடப்படும்
மாநில நிலையிலான தேசிய தினம்- ஷா ஆலமில் மூன்று சாலைகள் இன்று மாலை 3.00 மணி முதல் மூடப்படும்

ஷா ஆலம், ஆக. 30 - இங்குள்ள ஷா ஆலம் மெர்டேக்கா சதுக்கத்தில்

நடைபெறவிருக்கும் சிலாங்கூர் மாநில நிலையிலான 67வது சுதந்திர

தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு மாநிகரிலுள்ள சில சாலைகள்

போக்குவரத்துக்கு மூடப்படும்.

ஜாலான் பெர்சியாரான் டாமாய், பெர்சியாரான் பண்டாராயா மற்றும்

பெர்சியாரான் பெர்பண்டாரான் ஆகிய சாலைகள் இன்று மாலை 3.00 மணி

தொடங்கி நாளை (ஆகஸ்டு 31) விடியற்காலை 2.00 மணி வரை

மூடப்படும் என்று ஷா ஆலம் மாநகர் மன்றம் கூறியது.

இந்த சாலைகள் அனைத்தும் தேசிய தின அணிவகுப்பு ஒத்திகையை

முன்னிட்டு நேற்று மாலை 4.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை

மூடப்பட்டிருந்தன.

‘ஜீவா மெர்டேக்கா‘ எனும் கருப்பொருளிலான இந்த தேசிய தினக்

கொண்டாட்டம் இன்று மாலை 6.00 மணி தொடங்கி பல்வேறு

சுவாரஸ்மான நிகழ்வுகளுடன் நடைபெறவுள்ள வேளையில் இதில் சுமார்

60,000 பேர் வரை கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்வில் வாண வெடி. லேசர் ஒளி கண்காட்சி மற்றும் போலீஸ்,

இராணுவம் மற்றும் தீயணைப்புத் துறையின் சாகசப் படைப்புகளும் இடம்

பெறும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.