NATIONAL

மாநிலத்தின் 67வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு 'ஜிவா மெர்டேகா' எஹ்சான் ரஹ்மா விற்பனை ஏற்பாடு

30 ஆகஸ்ட் 2024, 2:10 AM
மாநிலத்தின் 67வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு 'ஜிவா மெர்டேகா' எஹ்சான் ரஹ்மா விற்பனை ஏற்பாடு

ஷா ஆலம், ஆகஸ்ட் 30: இன்று இரவு 8 மணிக்கு விஸ்மா பிகேபிஎஸ், செக்‌ஷன் 14க்கு முன்னால் நடைபெறவுள்ள 'ஜிவா மெர்டேகா' எஹ்சான் ரஹ்மா விற்பனை மூலம் மக்கள் மலிவு விலையில் சமையல் பொருட்களை வாங்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

டத்தாரான் மெர்டேகாவில் நடைபெறவுள்ள மாநிலத்தின் 67வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்த சிறப்பு விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிகேபிஎஸ் முகநூலில் தெரிவித்தது.

சிலாங்கூர் விவசாய மேம்பாட்டு கழகத்தால் (PKPS) கிட்டத்தட்ட 3000 இடங்களில் இந்த மலிவு விற்பனை நடத்தப்பட்டுள்ளது. ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயனடைந்த இச்சந்தைக்குச் சிலாங்கூர் அரசு RM40 மில்லியன் மானியத்தைச் செலவிட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.