NATIONAL

பாலஸ்தீனர்களுக்கு நன்கொடை வசூலிப்பதாக வெளிவரும் பொய் செய்திகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

29 ஆகஸ்ட் 2024, 9:25 AM
பாலஸ்தீனர்களுக்கு நன்கொடை வசூலிப்பதாக வெளிவரும் பொய் செய்திகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

புத்ராஜெயா, ஆகஸ்ட் 29: மலேசியாவில் சிகிச்சை பெற்று வரும் பாலஸ்தீனர்களுக்கு நன்கொடை வசூலிப்பதாக சமூக ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நினைவூட்டினார்.

அமைச்சர்கள் குழு கூட்டத்தின் போது பிரதமர் இந்த நினைவூட்டலை வெளிப்படுத்தியதாகத் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.

"மலேசியாவில் சிகிச்சை பெற்று வரும் பாலஸ்யர்களுக்கு உதவி, நிதி மற்றும் உணவு வழங்கும் நோக்கத்திற்காக அரசாங்கம் நன்கொடைகளை திரட்டவில்லை," என்று அவர் தகவல் தொடர்பு அமைச்சரின் வாராந்திர செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இதன் தொடர்பாக பொய் செய்தியைப் பெற்றவர்கள் காவல்துறையிடம் புகார் அல்லது தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணைக்குழுவில் முறையீடு செய்யுமாறு அறிவுறுத்தப் படுவதாக கூறினார்.

கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி, 41 காயமடைந்த பாலஸ்தீனர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் 86 பேர் இரண்டு விமானங்கள் மூலம் மலேசியா கொண்டு வரப்பட்டனர்.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.