NATIONAL

2027 சீ போட்டியை ஏற்று நடத்த மலேசியா முடிவு- ஓ.சி.எம். வரவேற்பு

29 ஆகஸ்ட் 2024, 5:05 AM
2027 சீ போட்டியை ஏற்று நடத்த மலேசியா முடிவு- ஓ.சி.எம். வரவேற்பு

கோலாலம்பூர், ஆக. 29 - எதிர்வரும் 2027ஆம் ஆண்டு தென்கிழக்காசிய

விளையாட்டு போட்டியை (சீ போட்டி) ஏற்று நடத்த மலேசிய எடுத்துள்ள

முடிவை மலேசிய ஒலிம்பிக் மன்றம் (ஓ.சி.எம்.) வரவேற்றுள்ளது.

ஈராண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்தப் போட்டியை ஏழாவது

முறையாக ஏற்று நடத்துவதன் மூலம் அரசியல், பெருளாதாரம் மற்றும்

விளையாட்டுத் துறைக்குப் பல்வேறு நன்மைகளையும் கொண்டு வர

முடியும் என்பதோடு, நாடு முழுமைக்கும் நேர்மறையான

விளைவுகளையும் ஏற்படுத்த இயலும் என்று அது கூறியது.

அரசாங்கத்தின் இந்த முடிவு, விளைளயாட்டுத் துறையை ஊக்குவிப்பதிலும் வட்டார நிலையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும் மலேசியா கொண்டுள்ள அசைக்க முடியாத கடப்பாட்டை புலப்படுத்துகிறது என்று அம்மன்றம் குறிப்பிட்டது.

தென்கிழக்காசிய தீபகற்ப விளையாட்டுப் போட்டி என முன்பு

அழைக்கப்பட்ட இப்போட்டியை 1965, 1971, 1989, 2001 மற்றும் 1017ஆம்

ஆண்டுகளில் மலேசிய வெற்றிகரமாக ஏற்று நடத்தியது.

மிக சமீபத்திய போட்டியில் 145 தங்கம், 92 வெள்ளி மற்றும் 86 வெண்கலப்

பதக்கங்களை வென்றி ஒட்டு மொத்த சாம்பியான மலேசியா வாகை

சூடியது.

இந்த சீ போட்டியை எதிர்வரும் 2025ஆம் ஆண்டு தாய்லாந்தும் 2029ஆம் ஆண்டு

சிங்கப்பூரும் ஏற்று நடத்தவுள்ளன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.