NATIONAL

டிஜிட்டல் கல்வியின் தரத்தை மேம்படுத்த மலேசியா உறுதி

27 ஆகஸ்ட் 2024, 8:12 AM
டிஜிட்டல் கல்வியின் தரத்தை மேம்படுத்த மலேசியா உறுதி

புரிராம், ஆகஸ்ட் 27: பிராந்தியத்தில் கல்வி சூழலை மாற்றும் முயற்சியில் சர்வதேச சமூகத்துடன் டிஜிட்டல் கல்வியின் தரத்தை மேம்படுத்த மலேசியா உறுதிபூண்டுள்ளது என்று கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் கூறினார்.

கடந்த ஆண்டு நவம்பரில் மலேசியா தேசிய டிஜிட்டல் கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியது. இது கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை வலுப்படுத்துவது நோக்கமாகக் கொண்ட ஒரு மூலோபாய கட்டமைப்பாகும்.

"இந்தக் கொள்கையானது SDG4 (நிலையான வளர்ச்சி இலக்கு 4) இன் இலக்குகளுடன் இணங்குகிறது, இது சமமான தரமான கல்வியை உறுதி செய்வதையும், அனைவருக்கும் வாழ்நாள் முழுவதும் கற்றல் வாய்ப்புகளை மேம் படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தக் கொள்கை டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் போட்டித் திறன் கொண்ட தலைமுறையை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது.

"மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் கல்வித் தலைவர்களின் திறன்களை அதிகரிப்பதன் மூலம் இந்த நோக்கம் அடையப்படுகிறது." என ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 13வது ஆசியான் கல்வி அமைச்சர்கள் கூட்டத்தில் ஃபத்லினா கூறினார்.

"இந்த திட்டமானது கடந்த கால கடமைகளுக்கு மதிப்பளிப்பது மட்டுமல்ல, பிராந்தியத்தில் கல்வியின் எதிர்காலத்தை வடிவமைப்பதுடன், எப்போதும் மாறிவரும் உலகளாவிய சூழலில் இது பொருத்தமானதாகவும், புதுமையானதாகவும், தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளது" என்று அவர் கூறினார்.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.