கோலாலம்பூர், ஆக. 27 - இவ்வாண்டு தேசிய தின கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து மேன்மை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிற்கு இன்று விளக்கமளிக்கப்பட்டது.
2024 தேசிய தினம் மற்றும் மலேசியா தின கொண்டாட்டங்களுக்கான முதன்மைக் குழுவின் தலைவரான தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி பாட்சில் இஸ்தானா நெகாராவில் மாமன்னருக்கு இந்த விளக்கத்தை வழங்கியதாக சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தரின் முகநூல் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தகவல் தொடர்பு அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ முகமது பவுஸி முகமது இசாவும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்.
2024ஆம் ஆண்டிற்கான தேசிய தினக் கொண்டாட்டம் டத்தாரான் புத்ராஜெயாவில் நடைபெறும்.


