ஷா ஆலம், ஆக. 27- சிலாங்கூரில் தவறான போதனைகளைப் பரப்பும்
நடவடிக்கையில் ஈடுபடும் தரப்பினருக்கு எதிராக கடும் நடவடிக்கை
எடுப்பதில் மாநில அரசு ஒருபோதும் தயக்கம் காட்டாது.
அமலாக்க அதிகாரிகள் அணுக்கமாகக் கண்காணித்து வருவதால்
இத்தகைய தவறான போதனை நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அதிகம்
மகிழ்ச்சியடைய வேண்டாம் என்று சமயத் துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் டாக்டர் ஃபாஹ்மி ங்கா கூறினார்.
தவறான போதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மாநில அரசு
மற்றும் அமலாக்க அதிகாரிகளின் கண்காணிப்பு வலையத்தில் அவர்கள்
இருக்கின்றனர் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்ள
விரும்புகிறேன் என்று அவர் சொன்னார்.
தவறான போதனைக்கான அறிகுறிகளை பொதுமக்கள் அறிந்து
கொள்வதற்கு ஏதுவாக விழிப்புணர்வு நிகழ்வொன்று இயங்கலை
வாயிலாக நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
தவறான போதனைகள் யாவை என்பதை கண்டறிவதற்கான
வழிகாட்டியை நாங்கள் வழங்குவோம். இது இளையோரை இலக்காகக்
கொண்டிருக்கும். இது தவிர, திருமணம் மற்றும் விவகாரத்து தொடர்பான
விஷயங்களும் இதில் இடம் பெறும் என்றார் அவர்.
மாநிலத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வரும் 14 தவறான போதனை
பரப்பும் தரப்பினரை சிலாங்கூர் இஸ்லாமிய சமய இலாகாவின்
ஒத்துழைப்புடன் தாங்கள் கண்காணித்து வருவதாக சிலாங்கூர் சமய
மன்றத்தின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் அஜிஸ் முகமது யூசுப் கடந்த 2022
டிசம்பர் மாதம் கூறியிருந்தார்.


