NATIONAL

எஃப்.ஏ. கிண்ணப் போட்டி- சிலாங்கூர் குழுவின் விளையாட்டு உணர்வு குறித்து பிரதமர் பெருமிதம்

26 ஆகஸ்ட் 2024, 1:59 AM
எஃப்.ஏ. கிண்ணப் போட்டி- சிலாங்கூர் குழுவின் விளையாட்டு உணர்வு குறித்து பிரதமர் பெருமிதம்

கோலாலம்பூர், ஆக 26 – நேற்று முன்தினம் இங்கு நடைபெற்ற  எஃப்.ஏ. கிண்ண  இறுதியாட்டத்தில் சிலாங்கூர் எப்.சி.  குழு காட்டிய விளையாட்டு உணர்வுக்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

ரெட் ஜெயன்ட்ஸ் என அழைக்கப்படும் சிலாங்கூர் அணியைத்  தோற்கடித்து இப்போட்டியில் வென்ற ஜோகூர் தாருல் தாசிம் (ஜே.டி.டி.) குழுவுக்கு பிரதமர் தனது முகநூல் வாயிலாக வாழ்த்து தெரிவித்துக் கொண்டார்.

இப்போட்டியில் வெற்றி பெற்ற ஜே.டி.டி. குழுவுக்கு வாழ்த்துக்கள். ஒற்றுமையை வளர்க்க விளையாட்டு மரபுகளைப் பேணுங்கள். சிலாங்கூர் அணியினரின் உணர்வைக் கண்டு வியப்படைகிறேன் என்று அவர் அச்செய்தியில் கூறியுள்ளார்.

நேற்று  முன்தினம்  புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில் சிலாங்கூர் அணியை 6-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜோகூர்  எஃப்.ஏ. கிண்ணத்தைக் கைப்பற்றியது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.