NATIONAL

நீர் மாசுபாடு காரணமாக சுங்கை பெர்ணம் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன

24 ஆகஸ்ட் 2024, 9:27 AM
நீர் மாசுபாடு காரணமாக சுங்கை பெர்ணம் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன

ஷா ஆலம், ஆகஸ்ட் 24: சுங்கை பெர்ணமில் ஏற்பட்ட நீர் மாசுபாடு காரணமாக சுங்கை பெர்ணம் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் பணியை பெங்குருசன் ஆயர் சிலாங்கூர் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

உலு சிலாங்கூர் மற்றும் சபாக் பெர்ணம் ஆகிய இடங்களில் திட்டமிடப்படாத நீர் விநியோக இடையூறுகளின் தாக்கத்தை குறைக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

"முக்கியமான வளாகங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு டேங்கர்கள் மூலம் நீர் விநியோகம் செய்யப்படும்.

"பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு இடையூறுகளின் தாக்கத்தை குறைக்க ஆயர் சிலாங்கூர் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது," என்று அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.

பயனர்கள் ஆயர் சிலாங்கூர் செயலி, முகநூல் மற்றும் X தளம் மூலம் கூடுதல் தகவல்களைப் பெறலாம். மேலும், 15300 மூலம் ஆயர் சிலாங்கூரை தொடர்புகொள்ளலாம் அல்லது https://airselangor.com ஐப் பார்வையிடவும்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.