NATIONAL

மாநில அளவில் 67வது தேசிய தினக் கொண்டாட்டத்தில் பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகள் ஏற்பாடு

24 ஆகஸ்ட் 2024, 9:25 AM
மாநில அளவில் 67வது தேசிய தினக் கொண்டாட்டத்தில் பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகள் ஏற்பாடு

ஷா ஆலம், ஆகஸ்ட் 24: டத்தாரான் மெர்டேகாவில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி மாநில அளவிலான 67வது தேசிய தினக் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்நிகழ்வில் டத்தோஸ்ரீ சித்தி நூர்ஹலிசா உட்பட ஆறு பிரபல கலைஞர்கள் கலந்து கொள்வர்.

மேலும், அதில் பைசல் தாஹிர், ரோய், போயி ஸ்டிங்ஸ், ப்ரொஜெக்டர் பேண்ட் மற்றும் செப்போ யங்ஸ்டர்ஸ் நடனக் குழு ஆகியயோரும் அடங்குவர் என சிலாங்கூர் மாநிலச் செயலாளர் அலுவலகம் முகாநூலில் தெரிவித்துள்ளது.

"சிலாங்கூர் மாநில அளவிலான 2024 தேசிய தினக் கொண்டாட்டம் நெருங்கி வருகிறது. சிலாங்கூர் குடிமக்களே உங்கள் தேசப்பற்றை வெளிப்படுத்துங்கள்!

மேலும், ஆகஸ்ட் 30 அன்று இரவு 8 மணிக்கு டத்தாரான் மெர்டேகா ஷா ஆலமில் நடைபெறும் பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகளை காண வாருங்கள்," என்று பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

மாநில அளவிலான 67வது தேசிய தினக் கொண்டாட்டத்தில் 10,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர் பார்ப்பதாக டத்தோ மந்திரி புசார் நம்பிக்கை தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.