NATIONAL

மஸ்ஜித் இந்தியா சாலையில் ஏற்பட்ட மண் உள்வாங்கலில் பெண் சுற்றுலா பயணி புதையுண்டார்

23 ஆகஸ்ட் 2024, 7:43 AM
மஸ்ஜித் இந்தியா சாலையில் ஏற்பட்ட மண் உள்வாங்கலில் பெண் சுற்றுலா பயணி புதையுண்டார்

ஷா ஆலம், ஆகஸ்ட் 23: இன்று காலை 8 மணியளவில் கோலாலம்பூரில் உள்ள மஸ்ஜித் இந்தியா சாலையில் ஏற்பட்ட மண் உள்வாங்கலில் இந்தியா நாட்டை சேர்ந்த பெண் சுற்றுப்பயணி ஒருவர் சுமார் 10 மீட்டர் ஆழத்தில் விழுந்து புதைந்ததாக நம்பப்படுகிறது.

இப்போது தீயணைப்புத்துறை மற்றும் மலேசியக் குடிமைத் தற்காப்புப் படையின் உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட சுற்றுலாப் பயணியை மீட்பதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர் என பெர்னாமா ட்விட்டரில் செய்தி வெளியிட்டது.

மேலும் அந்த இடத்திற்கு டாங் வாங்கி மாவட்ட துணை காவல் துறை தலைவர் சூப்ரிண்டெண்டன் நுசுலான் முகமட் டின் வந்திருந்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.