ALAM SEKITAR & CUACA

எட்டு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்

22 ஆகஸ்ட் 2024, 9:25 AM
எட்டு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்

ஷா ஆலம், ஆகஸ்ட் 22: இன்று மாலை 6 மணி வரை எட்டு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது.

அவை உலு சிலாங்கூர், கோலா சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக், பெட்டாலிங், கோலா லங்காட், உலு லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய மாவட்டங்கள் ஆகும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதே வானிலைதான் கோலாலம்பூர், புத்ராஜெயா, கெடா, பேராக், பகாங், கிளந்தான், ஜோகூர், சபா, சரவாக் மற்றும் லாபுவான் ஆகிய மாநிலங்களிலும் நிலவும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மெட் மலேசியாவின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழையின் தீவிரம் மணிக்கு 20 மில்லி மீட்டர் அதிகமாக, ஒரு மணி நேரத்திற்கு அல்லது அதற்கும் மேலாகப் பெய்யும் போது எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன.

இடியுடன் கூடிய மழையின் முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகியக் கால எச்சரிக்கை ஆகும்.

சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்குப் பொதுமக்கள் http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது myCuaca பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்யவும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.