ஷா ஆலம், ஆக. 22 - இம்மாதம் 26ஆம் தேதி வரை ஏழு நாட்களுக்கு போர்ட் கிள்ளான் நிலையத்தில் ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் பெரும் கடல் பெருக்கு அபாயம் குறித்து விழிப்புடனும் தயார் நிலையிலும் இருக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நாளை காலை கடலில் நீர் மட்டம் 5.5 மீட்டரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கிள்ளான் மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழு சமூக ஊடகங்களில் வெளியிட்ட விளக்கப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நாளை இரவில் மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதே வானிலை எதிர்வரும் ஆகஸ்டு 24ஆம் தேதி சனிக்கிழமை முதல் 26ஆம் தேதி திங்கள் வரை காலை வேளையில் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுமக்கள் உதவி மற்றும் கூடுதல் தகவலுக்கு 999 என்ற அவசரகாலத் தொலைபேசி எண்ணில் அல்லது 03-33716700 என்ற எண்ணில் கிள்ளான் மாவட்ட பேரிடர் நடவடிக்கை மையத்தை அல்லது 0109731963 என்ற எண்ணில் புலனம் வாயிலாகத் தொடர்பு கொள்ளலாம்.


