NATIONAL

சுக்மா- பத்தாவது நாளில் நான்கு தங்கப் பதக்கங்களுக்கு சிலாங்கூர் இலக்கு

21 ஆகஸ்ட் 2024, 3:06 AM
சுக்மா- பத்தாவது நாளில் நான்கு தங்கப் பதக்கங்களுக்கு சிலாங்கூர் இலக்கு
சுக்மா- பத்தாவது நாளில் நான்கு தங்கப் பதக்கங்களுக்கு சிலாங்கூர் இலக்கு

ஷா ஆலம், ஆக. 21- மலேசிய விளையாட்டுப் போட்டியின் (சுக்மா) பத்தாவது நாளான இன்று 48 தங்கப் பதக்கங்களுக்கான போட்டி நடைபெறுகிறது. அப்போட்டிகளில் சுக்மா 2024இல் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சதுரங்கப் போட்டிக்கான இரு தங்கப் பதக்கங்களும் அடங்கும்.

நேற்றிரவு நிலவரப்படி சிலாங்கூர் 19 தங்கம், 33 வெள்ளி மற்றும் 26 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.

இன்று நீர் சார்ந்தப் போட்டிகள், தடகளம், (திடல் தடப் போட்டிகள்) மின்-விளையாட்டு, பூப்பந்து (இரட்டையர் மற்றும் ஒற்றையர்) ஆகியவற்றில் தங்கப் பதக்கங்களைப் பெறுவதை சிலாங்கூர் இலக்காகக் கொண்டுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.