NATIONAL

படகு மூழ்கிய சம்பவத்தில் மூன்று பள்ளி மாணவர்களைக் காணவில்லை

20 ஆகஸ்ட் 2024, 7:55 AM
படகு மூழ்கிய சம்பவத்தில் மூன்று பள்ளி மாணவர்களைக் காணவில்லை

கூச்சிங், ஆகஸ்ட் 20: இன்று சுங்கை கயான் கம்போங் செலாம்பிட், லுண்டுவிலிருந்து 72  கிலோமீட்டர் தொலைவில் படகு ஒன்று மூழ்கிய சம்பவத்தில் மூன்று பள்ளிமாணவர்களைக் காணவில்லை. மேலும் 15 பேர் தங்களைக் காப்பாற்றிக் கொண்டனர்.

சரவாக் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (ஜேபிபிஎம்) செயல்பாட்டு

மையத்தின் (பிஜிஓ) முதற்கட்ட தகவல்களின்படி, காணாமல் போனவர்களில் 14 மற்றும்

17 வயதுடைய இரண்டு பெண் மாணவர்களும் 15 வயதுடைய ஒரு ஆண் மாணவரும்

அடங்குவர்.

"15 மாணவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொண்டனர். மூன்று பேர் இன்னும்

கண்டுபிடிக்கப்படவில்லை. கிராம மக்களால் தேடுதல் பணி இன்னும்

மேற்கொள்ளப்பட்டு வருகிறது  என்று செயல்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர்

தெரிவித்தார்.

சம்பவத்தின் போது படகில் பெண் மற்றும் படகு ஓட்டுனர் உட்பட 20 பேர்

இருந்ததாகவும், ஆரம்பகட்ட தேடுதல் கிராம மக்களால் மேற்கொள்ளப்பட்டதாகவும்

அவர் கூறினார்.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.