NATIONAL

இரண்டு பெண்கள் கொலை வழக்கில் சந்தேக நபருக்கு ஏழு நாட்கள் தடுப்பு காவல்

20 ஆகஸ்ட் 2024, 6:59 AM
இரண்டு பெண்கள் கொலை வழக்கில் சந்தேக நபருக்கு ஏழு நாட்கள் தடுப்பு காவல்

அலோர் ஸ்டார், ஆகஸ்ட் 20: பெண் மற்றும் அவரது மகள் கொலை செய்யப்பட்ட  வழக்கில் விசாரணைக்கு உதவுவதற்காக வெளிநாட்டவர் ஒருவர் ஏழு நாட்களுக்குத்  தடுப்பு காவலில் வைக்கப் பட்டுள்ளார்.

குற்றவியல் சட்டப் பிரிவு 302 இன் கீழ் விசாரணையை மேற்கொள்ள அனுமதிக்கும்

வகையில் மாஜிஸ்திரேட் சித்தி நோர் ஹஸ்லிசா முகமட் அலி இன்று முதல் ஆகஸ்ட் 26

வரை அந்நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்

இங்குள்ள சுல்தான் அப்துல் ஹலிம் நெடுஞ்சாலையில் கைவிடப்பட்ட கட்டிடத்திற்கு

பின்னால் உள்ள வடிகால் ஒன்றில் இரண்டு சடலங்கள் கண்டுபிடிக்கப் பட்டதைத்

தொடர்ந்து 43 வயதான வெளிநாட்டவர் புக்கிட் பினாங்கில் உள்ள மசூதியில் நேற்று

இரவு 9 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

அந்த இரண்டு சடலங்களும் முழுமையாக ஆடை அணிந்து, கழுத்தில் வெட்டுக்

காயங்களுடன் கிடந்தன.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.