NATIONAL

சுக்மா 2024 - சிலம்பப் போட்டியில் சிலாங்கூர் இரு வெண்கலப் பதக்கங்களை வென்றது

20 ஆகஸ்ட் 2024, 6:46 AM
சுக்மா 2024 - சிலம்பப் போட்டியில் சிலாங்கூர் இரு வெண்கலப் பதக்கங்களை வென்றது

ஷா ஆலம், ஆக. 20 - சரவா மாநிலத்தில் நடைபெற்று வரும் மலேசிய விளையாட்டுப் போட்டியில் (சுக்மா) இன்று பூப்பந்து மற்றும் சிலம்பப் போட்டிகளில் மூன்று பதக்கங்களை சிலாங்கூர் வென்றது.  பூப்பந்துப் போட்டியில் தங்கப் பக்கத்தை இம்மாநிலம் வென்ற வேளையில் சிலம்பத்தில் இரு வெண்கலப் பதக்கங்களை அது பெற்றது.

சிபு உள்ளரங்கில் இன்று காலை நடைபெற்ற பூப்பந்து கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் வோங் வின் சியோன் மற்றும் ஹோ லு ஈ அணி தங்கத்தை வென்றது. இந்த அணியிடம் தோல்வி கண்ட லோ ஹான் சென் மற்றும் கியோ ஷீ ஒடேல்லா வோங் ஜோடி வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றது.

காலை 11.00 மணிக்கு நடைபெற்ற சிலம்பப் போட்டியின் ஆண்களுக்கான குத்து வரிசை ஆட்டத்தில் எஸ். காளீஸ்வரன் 8.10 புள்ளிகளைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

நண்பகல் 12.00 மணியளவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பெண்கள் குத்து வரிசைப் பிரிவில் எம். ஹரிணி 7.77 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் பெற்றார்.

சுக்மா போட்டியை சுணக்கத்துடன் தொடங்கிய சிலாங்கூர் இன்றைய ஆட்டங்களில் ஆறு தங்கப்பதக்கங்களை வெல்ல இலக்கு நிர்ணயித்துள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.