NATIONAL

சுக்மா 2024 - இன்று ஆறு போட்டிகளில் தங்கம் வெல்ல சிலாங்கூர் இலக்கு

20 ஆகஸ்ட் 2024, 1:40 AM
சுக்மா 2024 - இன்று ஆறு போட்டிகளில் தங்கம் வெல்ல சிலாங்கூர் இலக்கு
சுக்மா 2024 - இன்று ஆறு போட்டிகளில் தங்கம் வெல்ல சிலாங்கூர் இலக்கு

ஷா ஆலம், ஆக 20 - மலேசிய விளையாட்டுப் போட்டிகளின் (சுக்மா)

ஒன்பதாவது நாளான இன்று பதக்கப் பட்டியலில் உபசரணை மாநிலமான

சரவாக் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் வேளையில் கூட்டரசு

பிரதேசமும் திரங்கானுவும் அதற்கு அடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

பதக்கப் பட்டியலில் ஏழாவது இடத்தில் இருந்து வந்த சிலாங்கூர் 100

மீட்டர் நீச்சல் போட்டியின் ஆடவர் பிரிவில் ஆண்ட்ரூ கோ மூலம்

தங்கப்பதக்கம் பெற்று நான்காவது இடத்திற்கு முன்னேறியது.

மேலும் 100 மீட்டர் தடகளப் போட்டியில் நுர் அஃப்ரினா பாட்ரிஷா முகமது

ரிசால், 5,000 மீட்டர் போட்டியில் ஏஸ்டர் ஜோய் ஹோங் லீ சென் மற்றும்

கராத்தே குமித்தே போட்டியின் பெண்கள் குழுவின் வாயிலாக சிலாங்கூர்

பதக்கங்களைப் பெற்றது.

இன்று பெண்கள் கால்பந்து போட்டி, ஆண்கள் மற்றும் பெண்கள் ரக்பி

போட்டி, பளு தூக்கும் போட்டி, நீச்சல், திடல்தடப் போட்டி மற்றும் கலப்பு

இரட்டையர் பூப்பந்து போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வெல்ல

சிலாங்கூர் இலக்கு நிர்ணயித்துள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.