NATIONAL

மோட்டார் சைக்கிள் பட்டறைக்கு அருகில் தொப்புள் கொடியுடன் பெண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது

15 ஆகஸ்ட் 2024, 8:43 AM
மோட்டார் சைக்கிள் பட்டறைக்கு அருகில் தொப்புள் கொடியுடன் பெண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது

ஈப்போ, ஆகஸ்ட் 15: நேற்று பெக்கான் திதி செரோங், பாரிட் புந்தாரில் உள்ள மோட்டார் சைக்கிள் பட்டறைக்கு அருகில் இருந்த பேசினில் பிறந்த பெண் குழந்தை தொப்புள் கொடியுடன் கண்டெடுக்கப்பட்டது.

மாலை 4.50 மணியளவில் பொதுமக்களிடமிருந்து அக்குழந்தை பற்றிய தகவல் கிடைத்தது என பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோ அசிசி மாட் அரிஸ் கூறினார்.

"சாட்சிகளின் உரையாடல்களை நாங்கள் பதிவு செய்வோம் மற்றும் குழந்தை கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்வோம்," என்று அவர் இன்று பேராக் காவல் படைத் தலைமையகத்தின் ஊடக அறையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

2.1 கிலோ எடையுள்ள அப்பெண் குழந்தையை மேல் சிகிச்சைக்காகப் பாரிட் பண்டார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும், குழந்தையை கைவிடும் நோக்கத்துடன் பிறப்பை மறைத்த குற்றத்திற்காக குற்றவியல் சட்டத்தின் 317வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.