NATIONAL

சுக்மா புட்சால் போட்டியில் சிலாங்கூர் 3-2 என்ற கோல் கணக்கில் ஜோகூரை வீழ்த்தியது

14 ஆகஸ்ட் 2024, 7:17 AM
சுக்மா புட்சால் போட்டியில் சிலாங்கூர் 3-2 என்ற கோல் கணக்கில் ஜோகூரை வீழ்த்தியது

ஷா ஆலம், ஆகஸ்ட் 14: நேற்று கோத்தா சமரஹான் உள்விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுக்மா புட்சால் போட்டியில் சிலாங்கூர் 3-2 என்ற கோல் கணக்கில் ஜோகூரை வீழ்த்தியது.

B குழுவின் தொடக்க ஆட்டத்திலிருந்தே கோல்களுக்கு வேட்டையாட பரஸ்பர தாக்குதல்களுடன் மிகவும் தீவிரமாக இருந்தது.

ஆறாவது நிமிடத்தில் ஜோகூர் வீரர் ஒருவரின் கைகளில் பந்து பட்டதையடுத்து, சிலாங்கூர் அணியின் கேப்டன் சியாஹிர் இக்பால் கான் அக்பர் கான் பெனால்டி கிக் மூலம் சிலாங்கூர் முன்னிலை படுத்தினார்.

இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, முகமட் ரஷிடி மஹடி அடித்த ஷாட் மூலம் ஜோகூர் 1-1 என ஸ்கோரை சமன் செய்தது.

20 வது நிமிடத்தில் இரண்டாவது பெனால்டியை நிறைவு செய்த முகமட் ஜுஃபைரி ஷம்சுல் அஸ்மார்டி மூலம் சிலாங்கூர் இரண்டாவது கோலை பெற்றது.

ஆட்டத்தின் 23 வது நிமிடத்தில் சியாஹிர் இக்பால் கோல் கணக்கை 3-1 என மாற்றினார். நான்கு நிமிடங்களுக்குப் பிறகு ரஷிடி ஜோகூருக்கு மேலும் ஒரு கோலை பெற்று தந்தார்.

நாளை நடைபெறும் இரண்டாவது போட்டியில் சிலாங்கூர் பேராக்கை சந்திக்கிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.