NATIONAL

டிரெய்லர் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் ஓட்டுனருக்குக் கை மற்றும் தலையில் காயம்

14 ஆகஸ்ட் 2024, 4:05 AM
டிரெய்லர் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் ஓட்டுனருக்குக் கை மற்றும் தலையில் காயம்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 14: நேற்று மதியம் ஜாலான் டூத்தா டோல் பிளாசா அருகே டிரெய்லர் ஒன்று விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் அதன் ஓட்டுனருக்குக் கை மற்றும் தலையில் காயங்கள் ஏற்பட்டன.

இச்சம்பவம் குறித்து மதியம் 12.03 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், ஸ்ரீ ஹர்தாமாஸ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து இரண்டு கருவிகளுடன் ஒன்பது பேர் கொண்ட குழு ஒன்பது நிமிடங்களுக்குள் சம்பவ இடத்திற்கு வந்தடைந்ததாகவும் கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (ஜேபிபிஎம்) அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. .

சம்பவ இடத்தில் டிரெய்லர் ஒன்று கவிழ்ந்த நிலையில் முன் பகுதியில் 50 சதவிகிதம் தீயில் எரிந்திருந்தது. பின்னர் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது மற்றும் மீட்பு நடவடிக்கை மதியம் 1.48 மணிக்கு முடிந்தது" என்று ஜேபிபிஎம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 30 வயதுடைய டிரெய்லரின் ஓட்டுனருக்கு கை மற்றும் தலையில் காயங்கள் ஏற்பட்டன மற்றும் மருத்துவக் குழுவால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு அந்த இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.

 "சம்பவத்திற்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது".

– பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.