NATIONAL

செப்டம்பர் 28ஆம் தேதி மக்கோத்தா தொகுதி  இடைத் தேர்தல்-தேர்தல் ஆணையம் அறிவிப்பு

13 ஆகஸ்ட் 2024, 5:46 AM
செப்டம்பர் 28ஆம் தேதி மக்கோத்தா தொகுதி  இடைத் தேர்தல்-தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புத்ராஜெயா, ஆக 13 - ஜோகூர் மாநிலத்தின்   மக்கோத்தா சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும் என  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 14ஆம் தேதியும்  முதல்கட்ட வாக்களிப்பு  செப்டம்பர் 24ஆம்  தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையத்தின் தலைவர் டத்தோஸ்ரீ ரம்லான் ஹருண் தெரிவித்தார்.

இந்த இடைத்தேர்தல் தொடர்பான முக்கிய தேதிகள் குறித்து ஆலோசிப்பதற்காக இங்குள்ள மெனாரா எஸ்பிஆரில் இன்று நடைபெற்ற சிறப்புக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.

மக்கோத்தா சட்டமன்ற உறுப்பினரான  டத்தோ ஷரீபா அஜிசா சைட் ஜைன் (வயது 63) குளுவாங்கில் உள்ள என்சே பெசார் ஹஜ்ஜா கல்சோம் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்டு 2 ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து அந்த தொகுதி காலியானது.

ஜோகூர் அம்னோ மகளிர்  பிரிவின் முன்னாள் தலைவரான அவர் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.