NATIONAL

அமைச்சரவை மாற்றமா? அச்செய்தியை பிரதமர் மறுத்தார்

12 ஆகஸ்ட் 2024, 9:29 AM
அமைச்சரவை மாற்றமா? அச்செய்தியை பிரதமர் மறுத்தார்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 12 – அமைச்சரவை மாற்றம் குறித்த செய்திகளைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நிராகரித்துள்ளார்.

இத்தகைய திட்டம் பற்றி தனக்கு தெரியாது என்று அன்வார் கூறினார்.

“இது பற்றி எனக்கு இப்போதுதான் தெரிவிக்கப் பட்டது. நான்   இதுவரை  எதுவும் கேள்வி படவில்ல… அமைச்சரவை மாற்றியமைப்பதில் யார் ? அவர் எப்படி  உதவுவார்? இது முக்கியமானதாச்சே, ”என எதிர் கேள்வி தொடுத்தார்.

இன்று கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற இவ்வாண்டுக்கான மலேசிய வணிகமயமாக்கல் உச்சி மாநாட்டைத் தொடங்கி வைத்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

அமைச்சரவையில் ஒரு மந்திரி புசார் நியமிக்கப்படுவாரா என்று போர்டலில் கேட்டபோது, பொதுத் தேர்தலுக்குப் பிறகு இது நடக்கலாம் என்று பிரதமர் தெரிவித்தார்.

டிசம்பரில் அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது, அமைச்சர்களின் எண்ணிக்கை 29 ல் இருந்து 31 ஆக உயர்ந்தது.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.