NATIONAL

மருத்துவர் போல் ஆள்மாறாட்டம்- இளம் பெண்ணுக்கு இரண்டு நாள் தடுப்புக் காவல்

9 ஆகஸ்ட் 2024, 4:50 AM
மருத்துவர் போல் ஆள்மாறாட்டம்- இளம் பெண்ணுக்கு இரண்டு நாள் தடுப்புக் காவல்

சிப்பாங், ஆக. 9 - இரு தினங்களுக்கு முன்னர் செர்டாங்கிலுள்ள

மருத்துவமனை ஒன்றில் அத்துமீறி நுழைந்து ஆள்மாறாட்டம் செய்த

புகாரின் பேரில் கைது செய்யப்பட் இளம் பெண் விசாரணைக்காக இரண்டு

நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அத்துமீறி நுழைந்தது மற்றும் ஆள்மாறாட்டம் செய்தது ஆகிய குற்றங்கள்

தொடர்பில் தண்டனைச் சட்டத்தின் 448 மற்றும் 170வது பிரிவுகளின் கீழ்

விசாரணை மேற்கொள்வதற்கு ஏதுவாக அந்த 14 வயதுப் பெண்ணைத்

தடுத்து வைப்பதற்கு சிப்பாங் நீதிமன்ற மாஜிஸ்திரேட் புக்ஹோரி முகமது

ரஸ்லான் அனுமதி வழங்கினார்.

ஆரஞ்சு நிற லாக்கப் உடையணிந்திருந்த அந்த இளம் பெண் இன்று

காலை 8.40 மணியளவில் போலீஸ் பாதுகாப்புடன் சிப்பாங்

நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டார்.

அந்த இளம் பெண்ணை நேற்று காலை 9.00 மணியளவில் செர்டாங்

மருத்துவமனையின் முகப்பிடத்தில் தாங்கள் கைது செய்ததாக சிப்பாங்

மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் கமாருள் வான் யூசுப் நேற்று

தெரிவித்திருந்தார்.

அப்பெண்ணிடமிருந்து மருத்துவமனைக்குச் சொந்தமான மருத்துவர்

சீருடை மற்றும் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என அவர்

மேலும் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.