NATIONAL

மோட்டார் சைக்கிளைத் திருடிய இளம் ஜோடி போலீஸ் சோதனையில் கைது

9 ஆகஸ்ட் 2024, 4:47 AM
மோட்டார் சைக்கிளைத் திருடிய இளம் ஜோடி போலீஸ் சோதனையில் கைது

ஈப்போ, ஆக. 9 - பாரிட் புந்தார் வட்டாரத்தில் மோட்டார் சைக்கிளைத்

திருடிய இளம் ஜோடியை போலீசார் நேற்று கைது செய்தனர்.

கோல குராவில் உள்ள ஹோம் ஸ்தேய்யில் தங்கியிருந்த 28 மற்றும் 24

வயதுடைய அந்த ஜோடியை நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் தாங்கள்

கைது செய்ததாக கிரியான் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன்

ஜூனா யூசுப் கூறினார்.

தனது வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்

காணாமல் போனது தொடர்பில் 36 வயது ஆடவர் ஒருவர் நேற்று

போலீசில் புகார் செய்திருந்ததாக அவர் சொன்னார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை

நடவடிக்கையின் போது திருடப்பட்டதாக புகார் செய்யப்பட்ட அந்த

மோட்டார் சைக்கிளும் சந்தேகப் பேர்வழியிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக

அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

கைதான 28 வயது ஆடவருக்கு போதைப் பொருள் தொடர்பில் ஒரு

குற்றப்பதிவும் 24 வயதான பெண்ணுக்கு போதைப் பொருள் தொடர்பில்

ஏழு குற்றப்பதிவுகளும் உள்ளதாக அவர் கூறினார்.

அந்தப் பெண் போதைப் பொருள் குற்றம் தொடர்பில் ஏற்கனவே கைதாகி

இரு தினங்களுக்கு முன்னர்தான் கிரியான் மாவட்ட போலீஸ்

தலைமையகத்தின் லாக்கப்பிலிருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்

என்றும் அவர் நீதிமன்ற விசாரணைக்காகக் காத்திருப்பதாகவும் ஜூனா

தெரிவித்தார்.

அவ்விருவருக்கும் எதிராக தண்டனைச் சட்டத்தின் 379ஏ பிரிவு மற்றும்

1952ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் 15(1)(ஏ) பிரிவின்

கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.