NATIONAL

ஒன்பது மாவட்டங்களில் ஜெலாஜா ஜோப்கேர் சிலாங்கூர் நடைபெறும்

9 ஆகஸ்ட் 2024, 4:41 AM
ஒன்பது மாவட்டங்களில் ஜெலாஜா ஜோப்கேர் சிலாங்கூர் நடைபெறும்

ஷா ஆலம், ஆகஸ்ட் 9: ஒன்பது மாவட்டங்களில் நடைபெறும் ஜெலாஜா ஜோப்கேர் சிலாங்கூர் மூலம் சுமார் 35,000 வேலை வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன என்று மனிதவள ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

இந்நிகழ்வு பெட்டாலிங் ஜெயாவில் ஜூலை 17 மற்றும் உலு சிலாங்கூரில் ஜூன் 29 ஆகிய நாட்களில் நடைபெற்றதாகப் பாப்பாராய்டு கூறினார்.

நாளை ஜெலாஜா ஜோப்கேர் ஸ்ரீ ஜுக்ரா மண்டபத்தில் (கோலா லங்காட்) நடைபெறும். அதனை தொடர்ந்து, எம்பிஏஜே பொது மண்டபம்,உலு லங்காட் (ஆகஸ்ட் 17) மற்றும் பெரிங்கின் மண்டபம், தாமான் ஶ்ரீ கோம்பாக் (செப்டம்பர் 21) ஆகிய இடங்களிலும் இந்நிகழ்வு தொடரும் என்று அவர் கூறினார்.

மேலும், ஹம்சா மண்டபம், கிள்ளான் (அக்டோபர் 5), டத்தோ பெங்காவா பெர்மாதாங் மண்டபம், கோலா சிலாங்கூர் (அக்டோபர் 19), பண்டார் பாரு சாலாக் திங்கி, சிப்பாங் ( நவம்பர் 16) மற்றும் துன் ராசாக், சபாக் பெர்ணம் (டிசம்பர் 14) ஆகிய இடங்களிலும் ஜெலாஜா ஜோப்கேர் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

"30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பல்வேறு வேலை வாய்ப்புகளை வழங்கவுள்ள இந்நிகழ்வில் கலந்து கொள்ள  வேலை தேடும் அனைவரும் இந்த நிகழ்விற்கு வரலாம்," என்று அவரை சந்தித்தபோது கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.