NATIONAL

 வெண்கலப் பதக்கம் வென்ற லீ சீ ஜியாவுக்குப் பிரதமர் வாழ்த்து

6 ஆகஸ்ட் 2024, 3:50 AM
 வெண்கலப் பதக்கம் வென்ற லீ சீ ஜியாவுக்குப் பிரதமர் வாழ்த்து

கோலாலம்பூர், ஆகஸ்ட் 6: பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தேசிய ஆடவர் ஒற்றையர் பிரிவு வீரர் லீ சீ ஜியாவுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்து தெரிவித்தார்.

"வாழ்த்துக்கள் லீ சீ ஜியா! நாட்டிற்கு இரண்டாவது வெண்கலப் பதக்கத்தைக் கொண்டு வந்த மற்றொரு அசத்தலான வெற்றி!" என நேற்றிரவு X தளத்தில் ஒரு ட்வீட் மூலம் அவர் கூறினார்.

தேசிய ஆண்கள் இரட்டையர் பிரிவின் விளையாட்டாளர்களான ஆரோன் சியா-சோ வூய் யிக் ஜோடி வெண்கலப் பதக்கத்தை வென்ற பிறகு, பாரீஸ் 2024 ஒலிம்பிக் போட்டியில் நாட்டுக்கு கிடைத்த இரண்டாவது பதக்கம் இதுவாகும்.

போர்டே டி லா சேப்பல் அரங்கத்தில் நடைபெற்ற வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் ஏழாவது இடத்தில் உள்ள சீ ஜியா, இந்திய வீரர் லக்ஷ்யா சென்னை எதிர்த்து 13-21, 21-16, 21-11 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, 26 வயதான சீ ஜியா, தாய்லாந்தின் உலக சாம்பியனான குன்லவுட் விடிட்சார்னிடம் 14-21, 15-21 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவினார்.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.