NATIONAL

கண்புரை நோயால் பாதிக்கப்பட்ட தேசிய கலைஞர் சோஃபியாவுக்கு பிரதமர் நன்கொடை வழங்கினார்

6 ஆகஸ்ட் 2024, 3:48 AM
கண்புரை நோயால் பாதிக்கப்பட்ட தேசிய கலைஞர் சோஃபியாவுக்கு பிரதமர் நன்கொடை வழங்கினார்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 6: பார்வைக்கு இடையூறு விளைவிக்கும் கண்புரை நோயால் பாதிக்கப்பட்ட தேசிய கலைஞர் சோஃபியா அல்லது சோபியா இப்ராஹிம் (75) என்பவருக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நன்கொடை வழங்கினார்.

பிரதமரின் பிரதிநிதி அரசியல் செயலாளர் அஹ்மட் ஃபர்ஹான் ஃபௌசி இந்த நன்கொடையை வழங்கினார் என முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டது.

"தேவையற்ற சிக்கல்களைத் தவிர்க்க அவருக்கு உடனடியாக கண் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

“எனவே, மருத்துவச் செலவைக் குறைக்க சகோதரர் ஃபர்ஹான் என் சார்பாக நன்கொடை அளித்துள்ளார்,” என்று பிரதமர் தெரிவித்தார்.

நாட்டின் தலைசிறந்த கலைஞரான மறைந்த டான்ஸ்ரீ பி. ராம்லீயுடன் இணைந்து டாக்டர் ருஷ்டியின் திரைப்படத்தில் நடித்த சோஃபியாவின் அறுவை சிகிச்சை சுமூகமாக நடந்து, அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் பிரதமர் எதிர்பார்க்கிறார்.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.