NATIONAL

புக்கிட் ஜாலில் அரங்கில் வரும் ஞாயிறன்று பாலஸ்தீன விடுதலை பேரணி- பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

2 ஆகஸ்ட் 2024, 7:43 AM
புக்கிட் ஜாலில் அரங்கில் வரும் ஞாயிறன்று பாலஸ்தீன விடுதலை பேரணி- பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோலாலம்பூர், ஆக 2- புக்கிட் ஜாலில், அக்ஸியாத்தா அரேனா அரங்கில் நடைபெற இருக்கும் பாலஸ்தீன விடுதலைப் பேரணியில் பங்கேற்க பொது மக்கள் அழைக்கப்படுகிறார்கள்.

இரவு 8.00 மணிக்கு தொடங்கும் இந்தப் பேரணிக்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையேற்பார் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.

அனைவரும் திரண்டு வாருங்கள், பாலஸ்தீன விடுதலைப் பேரணியை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் புக்கிட் ஜாலில் அக்ஸியாத்தா அரேனா அரங்கில் வரும் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைக்கிறார் என அவர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஹமாஸ் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் படுகொலையை கண்டிப்பதற்கும் பாலஸ்தீனத்திற்கு பிளவுபடாத ஆதரவைப் புலப் படுத்துவதற்கும் அந்த பேரணி நடத்தப்படுவதாக பிரதமர் நேற்று கூறியிருந்தார்.

வட தெஹ்ரானிலுள்ள குடியிருப்பு ஒன்றின் மீது கடந்த மாதம் 31ஆம் தேதி விடியற்காலை 2.00 மணியளவில்  இஸ்ரேல் மேற்கொண்ட வான் தாக்குதலில் ஹனியே கொல்லப்பட்டார்.

ஈரானிய அதிபர் மசூட் பெஸ ஸ்கியானின் பதவியேற்புச் சடங்கில் கலந்து கொள்வதற்காக ஹனியே ஈரான் சென்றிருந்த போது இந்த தாக்குதல் நிகழ்ந்தது.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் 24ஆம் தேதி இதே அக்ஸியாத்தா அரோனா அரங்கில் நடத்தப்பட்ட பாலஸ்தீன ஆதரவுப் பேரணியில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.