NATIONAL

கோல லங்காட், உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகங்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

1 ஆகஸ்ட் 2024, 7:56 AM
கோல லங்காட், உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகங்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

ஷா ஆலம், ஆக 1- கோல லங்காட் மற்றும் உலு சிலாங்கூர் நகராண்மைக்

கழகங்களுக்கு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின்

நியமனம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

சிலாங்கூர் மாநில அரசு செயலக அலுவலகம் தனது பேஸ்புக் பக்கத்தில்

இந்த அறிவிப்பை இன்று காலை வெளியிட்டது.

உலு சிலாங்கூர் நகராண்மைக் கழகத் தலைவராக பதவி வகித்து வந்த

முகமது ஹஸ்ரி நோர் முகமது கோல லங்காட் நகராண்மைக் கழகத்தின்

தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோல லங்காட் நகராண்மைக் கழகத் தலைவர் டத்தோ அமிருள் அஜிசான்

அப்துல் ரஹிம் கடந்த ஜூலை 22ஆம் தேதி சுபாங் ஜெயா டத்தோ

பண்டாராக நியமிக்கப்பட்டத்தை தொடர்ந்து அப்பதவி காலியானது.

இதனிடையே, ஹஸ்ரி விட்டுச் சென்ற உலு சிலாங்கூர் நகராண்மைக்

கழகத் தலைவர் பதவியை அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின்

செயலாளர் ஜூலைஹா ஜமாலுடின் ஏற்கவிருக்கிறார்.

இதற்கான நியமனக் கடிதத்தை மாநில அரசு செயலாளர் டத்தோ ஹாரிஸ்

காசிம், முகமது ஹஸ்ரி மற்றும் ஜூலைஹா ஆகியோரிடம்

ஒப்படைத்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.