NATIONAL

மாற்றுத்திறனாளியான தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 30 ஆண்டுகள் சிறை

31 ஜூலை 2024, 9:25 AM
மாற்றுத்திறனாளியான தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 30 ஆண்டுகள் சிறை

கோலா திராங்கானு, ஜூலை 31: மாற்றுத்திறனாளியான தனது சொந்த மகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட நபர் ஒருவருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 30 தடியடிகளும் விதித்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

45 வயதான தொழிலாளி அவர் மீதான மூன்று குற்றச்சாட்டுகள் நீதிபதி முகமட் சுல் ஜாகிகுடின் சுல்கிஃப்லி முன் வாசிக்கப்பட்ட பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அந்நபர் 2022 ஆம் ஆண்டு நள்ளிரவு 12 மணிக்கு டுங்குனில் உள்ள ஒரு வீட்டில் தனது 12 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அக்டோபர் 2023 மற்றும் இந்த ஆண்டு ஜனவரியில் முறையே மாலை 6 மணிக்கும், நள்ளிரவு 12.30 மணிக்கும் அதே இடத்தில் அதே குற்றத்தை மீண்டும் செய்துள்ளார். .

ஒவ்வொரு குற்றத்திற்கு, அவர் மீது குற்றவியல் சட்டப்பிரிவு 376(3)இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் எட்டு முதல் 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 10 கசையடி களுக்குக் குறையாமல் தண்டனை விதிக்கப்படும்.

வழக்கை துணை அரசு வக்கீல் இந்தான் நோர் ஹில்வானி மாட் ரிஃபின் கையாண்டார்.

நீதிபதி சுல் ஜாகிகுடின் அந்நபருக்கு எதிரான ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 10 கசையடிகளும் தண்டனையாக விதித்தார்.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.