NATIONAL

காணாமல் போன இளம் பெண்ணைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை காவல்துறை நாடியுள்ளது

31 ஜூலை 2024, 4:52 AM
காணாமல் போன இளம் பெண்ணைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை காவல்துறை நாடியுள்ளது

கோலாலம்பூர், ஜூலை 31: கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல் போனதாகக் கூறப்படும் 14 வயது இளம் பெண்ணைக் கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.

காணாமல் போன புத்ரி டாமியா டர்விஸ்யா அப்துல்லா, 155 சென்டிமீட்டர் உயரமும், தோராயமாக 60 கிலோ எடையும் கொண்டவர் என சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமத் கூறினார்.

"புத்ரி டாமியா டர்விஸ்யா இறுதியாக USJ 11, சுபாங் ஜெயா, சிலாங்கூரில், ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு காணப்பட்டதாக நம்பப்படுகிறது," என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

அந்த பெண்ணைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைமையகச் செயல்பாட்டு அறையை 03-78627222, 03-78627100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு வான் அஸ்லான் அழைப்பு விடுத்தார்.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.