NATIONAL

எல்.ஆர்.டி. பணிகளுக்காகப் பெர்சியாரான் பண்டார் உத்தாமாவில் போக்குவரத்து மாற்றம்

30 ஜூலை 2024, 4:19 AM
எல்.ஆர்.டி. பணிகளுக்காகப் பெர்சியாரான் பண்டார் உத்தாமாவில் போக்குவரத்து மாற்றம்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 30 - இலகு இரயில் திட்டம் 3 (எல்ஆர்டி 3)  பணிகளுக்காக சாலைகள் மூடப்படும் காரணத்தினால் பெர்சியாரான் பண்டார் உத்தாமாவில் நாளை  முதல் எதிர்வரும் ஆகஸ்ட் 7 வரை தினமும் இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்.

பெர்சியாரான் பண்டார் உத்தாமா (டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலை, துணைச் சாலை நோக்கிச் செல்லும் தடம்) மற்றும் பெர்சியாரான் பண்டார் உத்தாமாவிலிருந்து ஸ்ரீ பெந்தாஸ் செல்லும் சாலை மூடப்படும் என்று குத்தகை நிறுவனமான செத்தியா உத்தாமா எல்ஆர்டி.3 சென் பெர்ஹாட்   நிறுவனம் கூறியது.

பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம்  மற்றும் அமானட் லெபோ ராக்யாட் ஒப்புதலுடன் இந்த வழித்தடம் மாற்றம் அமல்படுத்தப்படுவதாக அது தெரிவித்தது.

இந்த போக்குவரத்து வழித்தட மாற்றம் காரணமாகப் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகர்யங்களுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்று இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.