NATIONAL

கிள்ளான் அரச மாநகர் மன்ற உறுப்பினர்களாக ஒன்பது பேர் நியமனம்

30 ஜூலை 2024, 4:13 AM
கிள்ளான் அரச மாநகர் மன்ற உறுப்பினர்களாக ஒன்பது பேர் நியமனம்

கிள்ளான், ஜூலை 30 - கிள்ளான் அரச மாநகர் மன்றத்தின் (எம்.பி.டி.கே.)

2024-2025ஆம் தவணைக்கு ஒன்பது புதிய உறுப்பினர்கள் நேற்று பதவி

உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

ஆறு ஆண்கள் மற்றும் மூன்று பெண்களை உள்ளடக்கிய அவர்கள்

அனைவரும் கிள்ளான் அரச மாநகர் மன்றத்தின் டத்தோ பண்டார் டத்தின்

படுகா நோராய்னி ரோஸ்லான் முன்னிலையில் பதவி உறுதி மொழி

எடுத்துக் கொண்டனர்.

இந்த பதவியேற்புச் சடங்கில் உரையாற்றிய நோராய்னி, சிறப்பான

சேவையை மாநகர் மன்றத்திற்கு வழங்கும் அதேவேளையில் மக்களின்

பிரச்சினைகளுக்கு விரைவாகவும் தீர்வு காணும்படி புதிதாகத்

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் அரச மாநகர்

மன்றத்தின் அனைத்து ஊழியர்களின் சார்பாகப் பாராட்டுகளைத்

தெரிவித்துக் கொள்கிறேன்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் மாநில அரசின்

எதிர்பார்ப்புக்கும் 1976ஆம் ஆண்டு ஊராட்சி மன்றச் சட்டத்தின் 10(1)வது

பிரிவுக்கும் ஏற்ப தங்கள் கடமைகளை செவ்வனே நிறைவேற்ற

வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன் என அவர் குறிப்பிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.