NATIONAL

சாலை விபத்தில் சிக்கியப் பெர்டானா வளாகத்தின் பாதுகாவலருக்குப் பிரதமர் நன்கொடை வழங்கினார்

27 ஜூலை 2024, 7:38 AM
சாலை விபத்தில் சிக்கியப் பெர்டானா வளாகத்தின் பாதுகாவலருக்குப் பிரதமர்  நன்கொடை வழங்கினார்

கோலாலம்பூர், ஜூலை 27: சமீபத்தில் சாலை விபத்தில் சிக்கிய ஶ்ரீ பெர்டானா

வளாகத்தின் பாதுகாவலர் முகமட் நுராமின், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்

இப்ராஹிமிடமிருந்து நன்கொடை பெற்றார்.

மருத்துவச் செலவுகள் மற்றும் பாதுகாவலரின் குடும்பத்தின் அன்றாட அலுவல்களின்

சுமையைக் குறைக்கும் இந்த நன்கொடையை சியாரா மடாணி திட்டத்தின் மூலம்

பிரதமரின் பிரதிநிதி அரசியல் செயலாளர் அஹ்மட் ஃபர்ஹான் பௌசி வழங்கினார்.

முகமட் நுராமின் விபத்தில் பலத்த காயங்களுக்கு ஆளானார். மேலும் பல அறுவை

சிகிச்சைகள் செய்ய வேண்டியிருந்தது. இப்போது அவர் படிப்படியாகக் குணமடைந்து

வருவதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது என பிரதமர் முகநூலில் தெரிவித்தார்.

சகோதரர் முகமட் நுராமின் விரைவில் குணமடையட்டும். அப்போழுதுதான் வழக்கம்

போல் கடமைக்குத் திரும்ப முடியும்``, என்று முகநூல் பதிவில் கூறப்பட்டுள்ளது.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.