NATIONAL

கோம்பாக் வெப்ப வானிலை நிலை ஒன்றைப் பதிவு செய்துள்ளது

26 ஜூலை 2024, 4:35 AM
கோம்பாக் வெப்ப வானிலை நிலை ஒன்றைப் பதிவு செய்துள்ளது

ஷா ஆலம், ஜூலை 26: தீபகற்பத்தில் உள்ள எட்டு பகுதிகளில்  சிலாங்கூரில் உள்ள  கோம்பாக் பகுதியும் வெப்ப வானிலை அளவு  நிலை ஒன்றைப் பதிவு செய்துள்ளது.   வெப்ப வானிலை  அளவு  நிலை ஒன்று என்பது அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 37 டிகிரி செல்சியஸ்  என்பதாகும்.

இன்று காலை 6 மணி நிலவரப்படி, கோம்பாக் தவிர, பேராக்கில் உள்ள லாரூட் மற்றும் மாதாங், கிளந்தானில் கோலா கிராய் மற்றும் பகாங்கில் ராவூப், ரோம்பின், தெமர்லோ, மாரான், பெந்தோங் ஆகிய பகுதிகளில் வெப்ப வானிலை முதல் நிலையில் பதிவாகியுள்ளதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை (மெட்மலேசியா) முகநூல் மூலம் தெரிவித்துள்ளது.

"தினசரி அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை குறைந்தது மூன்று நாட்களுக்குப் பதிவாகினால் வெப்ப வானிலை நிலை ஒன்றாகக் கருதப்படும்.

"தினசரி வெப்ப வானிலையின் நிலை குறித்த சமீபத்திய தகவலுக்கு, https://www.met.gov.my/iklim/status-cuaca-panas/ ஐப் பார்க்கவும்," என்று தெரிவிக்கப்பட்டது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.