வலுவான உள்கட்டமைப்பு, சிறந்த இணைப்பு, திறமையான மனித ஆற்றல் மற்றும் சிறந்த தளவாட போக்குவரத்து முறை ஆகியவையும் இதில் அடங்கும் என்று அவர் சொன்னார்.
சிலாங்கூரில் தொழில் துறைக்கான நிலங்கள் குறைவாக உள்ளது என்ற கூற்றை நிராகரித்த அவர், கோல லங்காட் தொடங்கி கிள்ளான் வரை எதிர்கால வளர்ச்சிக்கு 4,000 ஏக்கருக்கும் அதிகமான தொழில்துறை நிலங்கள் உள்ளன என்றார்.
முதலீட்டாளர்கள் முடிவு செய்யும் போது (தொழிற்சாலைகளை அமைப்பதற்கு) நிலத்தின் விலை மட்டும் கவனிக்கப்படுவதில்லை. மாறாக, நிலத்தின் விலையைத் தாண்டி, இங்கு கிடைக்கக்கூடிய உள்கட்டமைப்பு, திறமையான மனிதவளம், தளவாட போக்குவரத்து உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பு ஆகியவற்றையும் அவர்கள் கவனத்தில் கொள்கின்றனர் என்று ஹசான் குறிப்பிட்டார்.
கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நேற்று 2024ஆம் ஆண்டு சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக உச்சநிலை மாநாட்டை முன்னிட்டு நடத்தப்பட்ட “தலைமை நிர்வாக அதிகாரியின் உள்நோக்கு: முதலீடு வசதி, தொலைநோக்கு மற்றும் உத்திகள்” எனும் தலைப்பிலான ஆய்வரங்கில் உரையாற்றிய போது அவர் இதனைக் கூறினார்.
சிலாங்கூரில் நிலத்தின் உயர் விலைகள் மற்றும் இது முதலீட்டாளர்களுக்கு எத்தகைய சவால்களை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்து ஆய்வரங்கின் பங்கேற்பாளர்கள் எழுப்பியக் கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
முதல் சிலாங்கூர் திட்டத்தில் கவனம் செலுத்தப்படும் ஒன்பது துறைகள் மற்றும் மூன்று புதிய பொருளாதார வளர்ச்சி மண்டலங்கள் உள்ளன. இவற்றில் பல்வேறு மெகா திட்டங்கள் அடங்கும். இதன் மூலம் வருங்கால முதலீட்டாளர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன என்று அவர் சொன்னார்.


