NATIONAL

குழந்தையை துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகிக்கப்படும் பராமரிப்பாளர் கைது 

25 ஜூலை 2024, 9:26 AM
குழந்தையை துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகிக்கப்படும் பராமரிப்பாளர் கைது 

ஜோகூர் பாரு, ஜூலை 25: ஜோகூர் பண்டார் டத்தோ ஓனில் உள்ள ஓர் இல்லத்தில் குழந்தையை  கொடுமை செய்ததாகவும், துஷ்பிரயோகம் அல்லது கைவிட்டதாக சந்தேகிக்கப்படும் பராமரிப்பாளரை காவல்துறையினர் கடந்த திங்கட்கிழமை கைது செய்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பராமரிப்பாளர் வீட்டுக்கு அனுப்பப்பட்ட பின்னர் இரண்டு மாதப் பெண் குழந்தையின் இடது தொடை  எலும்பு முறிவு ஏற்பட்டது குறித்து தனது துறைக்கு ஒரு புகார் கிடைத்தது என ஜொகூர் பாரு செலாத்தான் (JBS) மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி ராவூப் செலாமட் கூறினார்.

தகவலின் பேரில், ஜேபிஎஸ் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் காவல்துறை குழு திங்கள் கிழமை காலை 10.50 மணியளவில் 36 வயதுடைய அப்பெண்ணைக் கைது செய்தது.

"மறு ஆய்வின் முடிவில் சந்தேக நபரிடம் முந்தைய குற்றப் பதிவுகள் எதுவும் இல்லை என்று கண்டறியப்பட்டது மற்றும் சிறுநீர் பரிசோதனையின் முடிவும் அவர் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்று காட்டியது," என அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

மேல் விசாரணைக்காக சந்தேகநபர் நேற்றிலிருந்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை ஆறு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு சிறுவர் சட்டம் 2001 இன் பிரிவு 31(1)(A) இன் கீழ் விசாரிக்க பட்டதாகவும் ரவூப் கூறினார்.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.