NATIONAL

சமய வளரச்சியில் மாநில அரசின் அளப்பரிய பங்களிப்பு - ஆலயத் தலைவர்கள் பாராட்டு

25 ஜூலை 2024, 9:05 AM
சமய வளரச்சியில் மாநில அரசின் அளப்பரிய பங்களிப்பு - ஆலயத் தலைவர்கள் பாராட்டு
சமய வளரச்சியில் மாநில அரசின் அளப்பரிய பங்களிப்பு - ஆலயத் தலைவர்கள் பாராட்டு
சமய வளரச்சியில் மாநில அரசின் அளப்பரிய பங்களிப்பு - ஆலயத் தலைவர்கள் பாராட்டு
சமய வளரச்சியில் மாநில அரசின் அளப்பரிய பங்களிப்பு - ஆலயத் தலைவர்கள் பாராட்டு
சமய வளரச்சியில் மாநில அரசின் அளப்பரிய பங்களிப்பு - ஆலயத் தலைவர்கள் பாராட்டு

ஷா ஆலம், ஜூலை 25 - சிலாங்கூரில் சமய வளர்ச்சியில் மாநில அரசு அளப்பரிய பங்கு ஆற்றி வருவதாக ஆலயத் தலைவர்கள் கூறினார்.

ஆலயங்களுக்கு ஆண்டுதோறும் நிதியுதவி வழங்குவது, நிலப்பிரச்சனைக்கு சுமூகமான முறையில் தீர்வு காண்பது போன்ற மாநில அரசின் நடவடிக்கைகள் இதற்கு சான்றாக விளங்குகின்றன என்று அவர்கள்  தெரிவித்தனர்.

ஆலயங்களின் வளர்ச்சிக்காக மானியம் வழங்கும் மாநில அரசின் பணி மிகவும் போற்றத்தக்கது என்பதோடு இந்த அளப்பரிய பணி தொடரப்பட வேண்டும் என்று சன்வே, டேசா மெந்தாரி குமரவேல் ஆலயத்தின் தலைவர் ஆர். பாஸ்கரன் கூறினார்.

இம்முறை மாநில அரசிடமிருந்து 10,000 வெள்ளி தங்களுக்கு கிடைத்துள்ளதாக கூறிய அவர், தாம் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் இரண்டாவது முறையாக கிடைத்த நிதி இதுவாகும் என்றார். இந்த நிதியைக் கொண்டு ஆலயத்தில் சீரமைப்பு பணிகளை தாங்கள் மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் சொன்னார்.

ஆலயத்தில் சமூக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு தாங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று மாநில அரசு 10,000 வெள்ளியை மானியமாக வழஙகியுள்ளதாக கோத்தா கெமுனிங், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் உதவித் தலைவர் திருமதி என்.சகுந்தலா தெரிவித்தார்.

மக்களின் நன்கொடைகளை மட்டும் நம்பி ஆலயங்களை நடத்துவது சாத்தியமில்லை என்பதால் மாநில அரசின் இத்தகைய உதவிகள் தங்களின் நிதிச் சுமையை பெரிதும் குறைக்க உதவுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் அடிக்கடி ஆலயங்களுக்கு வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட அவர், இதன் மூலம் பக்தர்களுக்கும் தலைவர்களுக்கும் இடையே அணுக்கமான உறவு ஏற்படும் என்றார்.

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல் பழைமை வாய்ந்த கோல சிலாங்கூர், கம்போங் பாரு தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் திருப்பணியை மேற்கொள்வதற்காக மாநில அரசு 5,000 வெள்ளி மானியம் வழங்கியுள்ளதாக ஆலயத்தின் துணைத் தலைவர் எம். ரவிக்குமார் தெரிவித்தார்.

தோட்டப்புற ஆலயமாக இருந்த போதிலும் அதற்கு உரிய அங்கீகாரம் வழங்கி மானியம் வழங்கிய மாநில அரசுக்கு குறிப்பாக ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டுவுக்கு தாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் சொன்னார்.

இதனிடையே, தங்களின் கோரிக்கையை ஏற்று இவ்வாண்டு 10,000 வெள்ளி மானியம் வழங்கிய மாநில அரசுக்கு தாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்வதாக ஆலம் மேகா, ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் ஆலயத் தலைவர் எ.மேகநாதன் தெரிவித்தார்.

பக்தர்களின் வசதிக்காக ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார். சமயம் மீதான பற்று காரணமாக சொந்த நேரத்தையும் பணத்தையும் செலவிட்டு சேவையாற்றி வரும் ஆலயப் பொறுப்பாளர்களுக்கு சிறிய அளவில் அலவன் கிடைப்பதற்குரிய ஏற்பாட்டை மாநில அரசு செய்து தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.