கோலாலம்பூர், ஜூலை 24: ஒற்றைத் தாயான கே. சரோஜினி (46), தனது மூன்று குழந்தைகளுடன் பிங்காஸ் திட்டத்தின் பலன்களை ஐந்து ஆண்டுகளாக அனுபவித்து வருகிறார்.
"நான் ஐந்து வருடங்களாக பிங்காஸ் உதவியைப் பெற்று வருகிறேன். மிகவும் நல்ல திட்டம், மகிழ்ச்சியாக உள்ளது. மாதம் 200 ரிங்கிடாக இருந்தது, தற்போது மாநில அரசு அதை ரிம300 ஆக உயர்த்தியுள்ளது.
"இப் பணத்தில் எனது குடும்பம் தேவையான உணவு பொருட்களை வாங்க முடியும். ஒரு தொழிலாளியாகப் பணிபுரியும் எனது ஊதியம் குடும்பத்தை நடத்த போதாது, ஏனெனில் எல்லா பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது," என்று அவர் சிலாங்கூர் கினி தொடர்பு கொண்டபோது கூறினார்.
மேலும், ஆர். சகுந்தலா (42) பிங்காஸ் உதவியை சுமார் மூன்று ஆண்டுகளாகப் பெற்று வருகிறார். இப்பணம் ஒரு விபத்தில் சிக்கிய அவரது கணவருக்கு அன்றாட தேவைகளை வாங்க பயன்படுத்தப்பட்டது.
"இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் பிங்காஸைப் பெற்றேன். நான் சமையலறை பொருட்களை வாங்கவும், சில சமயங்களில் என் கணவருக்கு பால் மற்றும் உணவு வாங்கவும் இதைப் பயன்படுத்துகிறேன்," என்று தொழிற்சாலையில் பணிபுரியும் அவர் தெரிவித்தார்.


