ஷா ஆலம் ஜூலை 24: ரவாங் சட்டமன்ற தொகுதி சேவை மையம் கம்போங் சுங்கை தெராந்தாங்கில் உள்ள இந்து கோவில் கட்டுமான பணிகளுக்கு உதவ RM10,000 வழங்கியுள்ளது. இங்குள்ள இந்தியர்களின் சமூக, சமய முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வண்ணம் இந்த நிதி ஊக்குவிப்பு வழங்கப்பட்டுள்ளது
இக்கோவில் அடுத்த ஆண்டு கட்டி முடிக்கப்படும் என நம்பப்படுவதாக அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கூறினார். தற்போது அங்கு சீரமைப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
இம்மானியத்திற்கான மாதிரி காசோலையை சுவா வேய் கியாட் அக்கோவிலின் நிர்வாக உறுப்பினர்களிடம் ஒப்படைத்தார்.
இத்தொகுதியில் உள்ள அனைத்து மக்களும் நல்லிணக்கமுடன், ஒற்றுமையாக வாழ, சமூக நிகழ்வுகளை உக்குவித்து மக்களிடையே சகோதரத்துவத்தையும் நல்லிணக்கத்தை வளர்க்க சட்டமன்ற அலுவலகம் முன்னகர்வு மேற்கொள்ள வேண்டும்.
அது ஒரு ஆக்ககரமான இளம் சமுதாயத்தை உருவாக்க வகை செய்யும் என்று நம்புவதால் இதுப்போன்ற உன்னதப் பணிகளுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் அனைவருக்கும் தன் நன்றியை சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் தெரிவித்துக்கொண்டார்.


