தும்பாட், ஜூலை 24 - கிளந்தானை ஒட்டிய மலேசியா-தாய்லாந்து கடல் எல்லை பகுதியில் அமலாக்க முகமைகள் சம்பந்தப்பட்ட செயல்பாடுகள், கருவிகள் மற்றும் நியமனங்கள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று அமலாக்க முகமை ஒருமைப்பாட்டு ஆணையத்தின் (EAIC) தலைவர் டான்ஸ்ரீ இஸ்மாயில் பாக்கர் கூறினார்.
நாட்டின் நுழைவுப் புள்ளிகளை நிர்வகிக்கும் அமலாக்க முகமைகளின் செயல்திறனை அதிகரிக்க நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட வேண்டும் என்றார்.
"எல்லைகளில் எதிர்நோக்கும் சவால்களுக்கு ஏற்ற வகையில் , அங்குள்ள அதிகாரிகளின் பயன்பாட்டில் உள்ள உபகரணங்களுக்கு தொடர்ச்சியான மேம்பாடுகள் தேவை, அதற்கு கணிசமான நிதி தேவைப்படுகிறது கருவிகள் பற்றாக்குறையும் உள்ளது.
நேற்று பெங்கலான் குபோரில் உள்ள குடிநுழைவு , சுங்கம், தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு வளாகத்தை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.
“எல்லை அதிகாரிகளின் பயன்பாட்டிலுள்ள கருவிகளின் ஆற்றலை அதிகரிப்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்கலாம்.
நாட்டின் கடல் எல்லைகளில் அதிகாரிகளிடையே ஊழலைக் கட்டுப்படுத்த பணி நடைமுறைகள் மேம்படுத்தப்படும் என்றும் இஸ்மாயில் எதிர்பார்க்கிறார். மேலும், பணி நடைமுறைகள் மற்றும் நிலையான இயக்க நடைமுறைகள் குறித்த தணிக்கைகள் மற்றும் ஆய்வுகளை மேற் கொள்வதில் அமலாக்க முகமை ஒருமைப்பாட்டு ஆணையம் தனது முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.
முன்னதாக, மலேசியா-தாய்லாந்து எல்லையை கட்டுப்படுத்தும் அமலாக்க அமைப்புகளுடன் ஒரு கூட்டம் நடைபெற்றது. அவர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
- பெர்னாமா


