கோலாலம்பூர், ஜூலை 24: நேற்றைய நிலவரப்படி வெப்ப வானிலை தொடர்பான நோய் சம்பவங்களின் மொத்த எண்ணிக்கை 112 ஆக அதிகரித்துள்ள நிலையில் ஜூலை 16 அன்று 109 வழக்குகள் பதிவாகியிருந்தன.
அந்த எண்ணிக்கையில் 26 வெப்பப் பக்கவாதம், 78 வெப்ப சோர்வு மற்றும் 8 வெப்ப வலிப்பு ஆகும் என தேசியப் பேரிடர் மேலாண்மை முகமையின் (நட்மா) அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
இந்த வாரம் புதிய இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை, மொத்த வெப்ப பக்கவாத இறப்புகளின் எண்ணிக்கை ஐந்தாக உள்ளது.
"தற்போது மருத்துவமனையில் எந்த சம்பவங்கள் தொடர்பாகவும் சிகிச்சை பெறவில்லை. அனைத்து வித வெப்ப அலை பாதிப்புகளுக்கும் நோயாளிகள் சிகிச்சை பெற்று குணமடைந்து விட்டனர்" என்று நட்மா கூறியது.
வானிலை முன்னறிவிப்பைப் பொறுத்தவரை, சூறாவளி மற்றும் வெப்பமண்டல புயல் வகைகளில் இரண்டு வெப்பமண்டல சூறாவளிகள் பிலிப்பைன்ஸின் வடகிழக்கு மற்றும் தென் சீனக் கடலில் செயலில் உள்ளன. இதனால் நாட்டின் பிராந்தியத்தில் வானிலை அடுத்த சில நாட்களில் வறண்டு, மழை குறைவாக இருக்கும்.
வானிலை மாதிரிகளின் பகுப்பாய்வு அடிப்படையில், ஜூலை 27 முதல் இரண்டு வெப்பமண்டல சூறாவளிகள் வலுவிழக்கும்போது நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பெர்னாமா


