NATIONAL

சுபாங் விமான நிலையத்தை மேம்படுத்துவது தொடர்பாக   எம்.ஏ.எச்.பி.- எம்.பி.ஐ. இடையே ஒப்பந்தம்

24 ஜூலை 2024, 6:45 AM
சுபாங் விமான நிலையத்தை மேம்படுத்துவது தொடர்பாக   எம்.ஏ.எச்.பி.- எம்.பி.ஐ. இடையே ஒப்பந்தம்

கோலாலம்பூர், ஜூலை 24 - சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா விமான நிலையத்தின்  4 மற்றும் 5 வது  மண்டலங்களின் மேம்பாடு  மற்றும் வர்த்தக மயப்படுத்தும் திட்டங்களை முன்னெடுப்பதற்கான  மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (எம்.எச்.ஏ.பி.) மற்றும்  எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கழகம்  புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

சுபாங் விமான நிலைய மறுஉருவாக்கத் திட்டத்தின் (எஸ்.ஏ.ஆர்.பி.) கீழ் வணிக விமானம் மற்றும் விண்வெளிப் பிரிவுகளுக்காகப் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட  இந்த மண்டலங்களின் வளர்ச்சி, வணிக விமானங்களை நிறுத்தும் ஹேங்கர்களுக்கான சிறப்புப்  புதிய பகுதியை நிர்மாணிப்பது மற்றும் விண்வெளி துறை சார்ந்த  உற்பத்தியாளர்கள், பொருத்துவோருக்கு ஏற்ற வகையிலான  விண்வெளி சுற்றுச்சூழல் அமைப்பைப் விரிவாக்குவது ஆகியவையும் அடங்கும் என எம்.பி.ஐ. தனது முகநூலில் கூறியது.

முதலாவது சிலாங்கூர் திட்டத்தின் வியூக ஒத்துழைப்பின்  மாநிலத்தின் மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அது குறிப்பிட்டது.

இங்கிலாந்தில் நடைபெறும்  2024 ஃபார்ன்பரோ அனைத்துலக விமானக்  கண்காட்சியில்  இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

பிராந்தியத்தில் புதுமை, நிலைத்தன்மை மற்றும் பொருளாதார வளர்ச்சியை வளர்ப்பதற்கு ஒரு வலுவான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க இந்த ஒப்பந்தம் உதவும் என்று அவ்விரு நிறுவனங்களும் இன்று வெளியிட்ட ஒரு கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.

இரு நிறுவனங்களின் வளங்கள் மற்றும் நிபுணத்துவத்தை இணைப்பதன் மூலம் நிலையான பொருளாதார வளர்ச்சி மற்றும் உள்ளூர் சமூகத்திற்கு புதிய வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று எம்.எச்.ஏ.பி. பிரதிநிதியும் கே எல்.ஐ.ஏ. ஏரோபோலிஸ் சென். பெர்ஹாட் தலைவருமான ரண்டில் சிங் கூறினார்.

இந்தக் கூட்டுத் திட்டம்  உலகளாவிய விமானப் போக்குவரத்து மற்றும் விண்வெளித் தொழில்களில் மலேசியாவின்  இடத்தை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது என அவர் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.