ஜோகூர் பாரு, ஜூலை 23 - சனிக்கிழமை (ஜூலை 20) இஸ்கண்டார் புத்ரியில் உள்ள ஷாப்பிங் சென்டரில் ஆறு வயது சிறுமி கடத்தப்பட்ட வழக்கில் தடுத்து வைக்கப்பட்ட இறுதி சந்தேக நபர் நேற்று முதல் ஏழு நாட்கள் விசாரணைக்கு தடுத்து வைக்கப்பட்டார்.
31 வயதுடைய சந்தேக நபருக்கு எதிராக மஜிஸ்திரேட் முஹம்மட் ஃபித்ரி மொக்தாரால் மேல் விசாரணைக்கு தடுத்து வைக்கும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை 4.45 மணி அளவில் பத்தாங் காலி, சிலாங்கூர் அருகிலுள்ள ஒரு பட்ஜெட் ஹோட்டலில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர், கைவிலங்குகளுடன் மற்றும் பலத்த காவல்துறையினர் பாதுகாப்புடன் பிற்பகல் 3 மணியளவில் ஜோகூர் பாரு நீதிமன்ற வளாகத்திற்குக் கொண்டு வரப்பட்டார்.
முன்னதாகக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய 28 முதல் 55 வயதுடைய நான்கு சந்தேக நபர்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 26) வரை நான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு உள்ளூர் ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் அடங்கிய நான்கு சந்தேக நபர்களும், காணாமல் போன குழந்தை வழக்கின் விசாரணைக்கு உதவுவதற்காகத் தடுத்து வைக்கப்பட்டனர்.
- பெர்னாமா


